இந்தியா

வீடியோ: முடிஞ்சா வந்து பாரு!! சிறுத்தையிடமிருந்து தப்பி மின்னல் வேகத்தில் பறந்த காட்டுப் பன்றிகள்!! வைரலாகும் வீடியோ..

Summary:

யாருகிட்ட.. முடிஞ்சா வந்து பாரு! சிறுத்தையிடமிருந்து தப்பி மின்னல் வேகத்தில் பறந்த காட்டுப் பன்றிகள்! வைரலாகும் வீடியோ இதோ...

சமூக வலைதளங்களில் விலங்குகள், பறவைகள் குறித்த பல வீடியோக்கள் பெருமளவில் வைரலாகி வருகிறது. இவ்வாறு சில வீடியோக்கள் சிரிக்க வைப்பதும், சில வீடியோக்கள் சிந்திக்க வைப்பதும், சில  வீடியோக்கள் ஆச்சர்யபட வைப்பதுமாக இருக்கும்.

இந்த  குறிப்பிட்ட வீடியோவில், புல்வெளி நிறைந்த  சாலையில் முதலில் தாய் பன்றி ஒன்று நடந்து செல்கிறது. அதனை தொடர்ந்து அதன் குட்டிகள் மூன்றும் அதன் பின்னால் நடந்து செல்கின்றன. நடந்து  சென்ற தாய் பன்றி ஒரு நிமிடம் நின்று பார்த்தபோது திடீரென சிறுத்தை ஒன்று புல்வெளிக்குள் இருந்து பாய்ந்து வருகிறது.

உடனே  தாய்  பன்றி  மற்றும் குட்டிகள் அனைத்தும் ஓட்டம் பிடித்து வெவ்வேறு வழிகளில் சிறுத்தையிடம் பிடிப்படாமல் சாதுரியமாக ஓடுகிறது. இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.


Advertisement