காதலியை லாட்ஜுக்கு கடத்தி சென்று நண்பர்களுடன் மதுபோதையில் கூட்டுபலாத்காரம்.. காரியம் முடிந்ததும் தூக்கிலிட்டு கொலை.. பதறவைக்கும் சம்பவம்.!

காதலியை லாட்ஜுக்கு கடத்தி சென்று நண்பர்களுடன் மதுபோதையில் கூட்டுபலாத்காரம்.. காரியம் முடிந்ததும் தூக்கிலிட்டு கொலை.. பதறவைக்கும் சம்பவம்.!


Andra Pradesh College girl Gang Rapped by Love boy and his friends Murder ends

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள சத்தியசாயி மாவட்டம், நல்லபள்ளி கிராமத்தை சேர்ந்த 22 வயது மாணவி, திருப்பதியில் செயல்பட்டு வரும் கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்து 3 ஆம் வருடம் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்தவர் சாதிக் என்ற இளைஞர். மாணவியும் - சாதிக்கும் காதலித்து வந்ததாக தெரியவருகிறது. 

இந்நிலையில், நேற்று முன்தினத்தில் திருப்பத்திற்கு வந்த காதலன், காதலியிடம் திருமணம் செய்வதாக கூறி காரில் மல்லப்பள்ளி பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்குள்ள விடுதியில் முன்னதாகவே தனது நண்பர்களை திட்டமிட்டு தங்க வைத்துள்ளார். இது எதுவுமே தெரியாமல் காதலனுடன் மாணவி சென்றுள்ளார். 

காதலியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்ற காமுகன், 2 நாட்கள் கல்லூரி மாணவியை விடுதி அறைக்குள் அடைத்து வைத்து பலாத்காரமா செய்துள்ளான். மேலும், அவனின் நண்பர்களும் மதுபோதையில் மாணவியை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இறுதியில் கயவர்களின் கொடுமையால் மாணவி சோர்வடைந்து மயக்கமாகி இருக்கிறார். 

இதனால் அவர் இறந்துவிட்டார் என எண்ணிய கொடூரன்கள், மாணவியை மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்தது போல நாடகமாடி இருக்கின்றனர். காவல் துறையினருக்கு அவர்களே தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். அப்போதே சாதிக்கின் மீது சந்தேகமடைந்த காவல் துறையினர், அவனிடம் நடத்திய விசாரணையில் பேரதிர்ச்சி உண்மை வெளியானது.

இதனையடுத்து, காமுகன் சாதிக்கை கைது செய்த காவல் துறையினர், அவனின் நண்பர்களுக்கு வலைவீசியுள்ளனர்.