இந்தியா

3 பெண் குழந்தைகள்..! ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்ட இளம் தாய்..! கிடைக்காததால் எடுத்த விபரீத முடிவு!

Summary:

Andhra young women died because of no male baby

தொடர்ந்து மூன்று பெண் குழந்தைகள். ஆண் வாரிசு இல்லாததால் தாய் ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் அதிர்ச்சியை. ஆந்திராவின் கர்னூல் மாவட்டம் சுங்கேசுலா என்னும் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் இவரது மனைவி பெயர் சரம்மா.

இந்த தம்பதியினருக்கு அடுத்தடுத்து மூன்று பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இதனால், தங்கள் குடும்பத்துக்கு ஒரு ஆண் வாரிசு இல்லையே என்ற வருத்தத்தில் சரமாவின் உறவினர்கள் அவரை அவ்வப்போது திட்டி வந்ததாக தெரிகிறது. மேலும் தனக்கு ஒரு ஆண் குழந்தை இல்லையே என சரமாவும் வருத்தத்தில் இருந்துள்ளார்.

மேலும், மாதவிடாய் சுழற்சியின் போதும் மிக கடுமையான வயிற்று வலியால் தொடர்ந்து பல மாதங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார் சரம்மா. இந்த 2 காரணங்களாலும் கடும் மன உளைச்சலில் இருந்த சரம்மா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார்.

சரம்மாவை மீட்டு உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதியுள்ளனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.


Advertisement--!>