இந்தியா

பட்டப்பகலில் சாலை ஓரம் காருக்குள் கும்பலாக பெண்கள் செய்த காரியம்.. வைரலாகும் ஷாக் வீடியோ..

Summary:

பெண்கள் சிலர் சாலை ஓரமாக காரை நிறுத்திவிட்டு, காருக்குள் அமர்ந்து கும்பலாக மதுஅருந்தும் வீ

பெண்கள் சிலர் சாலை ஓரமாக காரை நிறுத்திவிட்டு, காருக்குள் அமர்ந்து கும்பலாக மதுஅருந்தும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த சில பெண்கள் தங்கள் விடுமுறை தினத்தை கொண்டாடும் விதமாக மது, அசைவ உணவுகளுடன் கார் ஒன்றில் புறப்பட்டு, பின்னர் சாலை ஓரமாக காரை நிறுத்திவிட்டு காருக்குள் அமர்ந்தவாறு மது அருந்தியுள்ளனர். மேலும் அவர்களுடன் காரில் வந்த ஆண் நண்பர்கள் காருக்கு வெளியே நின்றபடி இருக்க, அந்த பெண்கள் கார் கதவை திறந்துவிட்டு அசைவை உணவை சாப்பிட்டுக்கொண்ட மது அருந்துகின்றனர்.

மேலும் தங்களின் உற்சாகத்தை படம் பிடித்து முக நூலில் அவர்கள் பகிர்ந்த நிலையில், தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையில் சிக்கி உள்ளனர். மது அருந்திய அந்த பெண்கள் எப்படி காரை ஓட்டிச்சென்றனர் என்பதுகுறித்து தற்போது ஆந்திரா போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

பலருக்கும் உதாரமனாக இருக்கவேண்டிய பெண்கள், இப்படி பட்டப்பகலில் சாலை ஓரத்தில் மது அருந்திக்கொண்ட கும்மாளம் போடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Credits: www.polimernews.com


Advertisement