முதல் நாள் போன் செய்து நலம்விசாரித்த மகன் அடுத்த நாள் பிணமாக கிடப்பதாக வந்த தகவல்.! துடித்துப்போன பெற்றோர்.

முதல் நாள் போன் செய்து நலம்விசாரித்த மகன் அடுத்த நாள் பிணமாக கிடப்பதாக வந்த தகவல்.! துடித்துப்போன பெற்றோர்.


Andhra warangal youth dies in London due to heart attack

இரண்டு நாட்களுக்கு முன் பெற்றோருக்கு போன் செய்து நலம் விசாரித்த மகன் அடுத்த நாளே பிணமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலையே முடங்கி உள்ளனர். இந்நிலையில், தெலுங்கானா மாநிலம், ராம் நகர் பகுதியை சேர்ந்த சதிஷ் என்ற 26 வயது இளைஞர் லண்டனில் மேற்படிப்பு படித்துவந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை பெற்றோருக்கு போன் செய்த சதிஷ் கொரோனா நிலவரம் கேட்டறிந்ததோடு, தான் நலமாக இருப்பதாகவும் பெற்றோர்க்கு தகவல் கூறிவிட்டு போனை வைத்துவிட்டார். இதனை அடுத்து அடுத்த நாள் காலை சதிஷ் தனது படுக்கையில் இருந்து கீழே விழுந்து கிடந்துள்ளார்.

dead

நீண்ட நேரமாகியும் சதிஷ் கதவை திறக்காததால் அவரது நண்பர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று சதீஷை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சதீஷை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த தகவல் சதீஷின் பெற்றோருக்கு தெரியப்படுத்தவே அவர்கள் கதறி துடிதுள்ளனர்.

ஊரடங்கு காரணமாக உடலை இந்தியா கொண்டுவருவதில் சிக்கல் எழுந்துள்ளதால் தெலுங்கானா அரசு தங்களுக்கு உதவவேண்டும் என சதீஷின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.