தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் சோகம்; சரிந்து விழுந்த நிர்வாகி.!

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் சோகம்; சரிந்து விழுந்த நிர்வாகி.!


Andhra Pedana TDP Party Supporter Feeling Sad 

 

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் 2024 சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளுங்கட்சியாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரசும், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசமும் கடுமையான அரசியல் போட்டியில் ஈடுபட்டு வருகிறது. 

அங்குள்ள கிருஷ்ண மாவட்டம் பெடனா தொகுதியில் தேர்தல் வேட்பாளருக்கான அறிவிப்புகள் இன்று வெளியாகின. அத்தொகுதியை சேர்ந்த போரகடடா வேதவ்யாஸ் என்பவர் கடந்த 2014ம் ஆண்டு முதல் எம்.எல்.ஏ வேட்பாளருக்கான வாய்ப்புக்காக காத்திருந்துள்ளார். 

2014ல் வாய்ப்பு கிடைக்காததால், விரக்தியில் இருந்த அவர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் இருந்து விலகி தன்னை 2016ல் தெலுங்கு தேசத்தில் இணைத்துக்கொண்டார். கடந்த 2019ல் எம்.எல்.ஏ வேட்பாளருக்கான அறிவிப்பும் கைகூடவில்லை. 

இதனால் 2024ல் தனக்கான வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த வேதவ்யாசுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் மனமுடைந்துபோன அவர் திடீரென சோகத்தில் சரிந்து விழுந்தார். அவரை ஆஸ்வாசப்படுத்திய தொண்டர்கள், அங்கிருந்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.