கொரோனா பாதிப்பு ஏற்படும் அரசு ஊழியா்களுக்கு 14 நாள் விடுமுறை அறிவித்த மாநில அரசு..! எங்கு தெரியுமா.?andhra-14-days-special-leave-for-government-employees-w

கொரோனாவால் பாதிக்கப்படும் அரசு ஊழியா்களுக்கு 14 நாள் சிறப்பு விடுமுறை அளித்து உத்திரவு வெளியிட்டுள்ளது ஆந்திரா மாநில அரசு.

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேமாக பரவி பெரும் இழப்புகளை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனவை கட்டுப்படுத்தவும், மக்களை கொரோனாவில் இருந்து காப்பாற்றவும் அனைத்து மாநில அரசுகளும் தீவிரமாக போராடிவருகிறது.

corona

இந்நிலையில் ஆந்திர மாநில அரசு 30 சதவீத ஊழியா்கள் மட்டுமே அலுவலகத்தில் பணிபுரிய அனுமதி வழங்கியுள்ளநிலையில், கொரோனா தொற்று ஏற்பட்டு பாதிக்கப்படும் அரசு ஊழியா்களுக்கு 14 நாள் சிறப்பு விடுப்பு அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆந்திராவில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் 5 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது. அதேபோல் மாநிலம் முழுவதும் இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.