#Breaking: Amul பால் விலை அதிகரிப்பு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! 



Amul Milk Price Hike Rs 2 Official Announcement

பால் மற்றும் அதுசார்ந்த பொருட்களின் உற்பத்தியில் இந்திய அளவில் அறியப்படும் அமுல் பால் பாக்கெட் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் விற்பனையில் பிரதானமாக அறியப்படும் நிறுவனமாக அமுல் உள்ளது. பால், தயிர், நெய், வெண்ணெய், சாக்லேட் போன்ற பல்வேறு பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனையில் இந்திய அளவில் முன்னணி பெற்ற நிறுவனமாகவும் இது இருக்கிறது. 

Amul Milk

அமுலின் தயாரிப்பு பொருட்கள் அனைத்தும் சற்று விலை உயர்வாகவே இருக்கும். இந்த நிலையில், அமுல் நிறுவன பால் பாக்கெட்டுகளின் விலை ரூ.2 உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு மார்ச் 1 ஆம் தேதி (நாளை) முதல் உடனடி அமலுக்கு வருகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.