அரசியல் தமிழகம்

மக்களுக்காக உழைக்கும் கட்சி வேண்டுமா.? குடும்பத்திற்காக உழைக்கும் கட்சி வேண்டுமா? கர்ஜித்த குரலில் அமித்ஷா.!

Summary:

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சியினரும்

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் முடிவடைகிறது. இதனால், அரசியல் கட்சியின் தலைவர்கள் அனல் பறக்கும் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்தநிலையில் திருநெல்வேலியில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜகவின் மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா பேசினார். மக்கள் முன்பு பேசிய அமித்ஷா, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தன் மகனை பற்றி மட்டுமே கவலை கொள்கிறார். பிரதமர் மோடி, விவசாயிகள், மீனவர்கள், மக்கள் நலன் குறித்து சிந்திக்கிறார். 

இறந்த தலைவர்கள் குறித்து திமுகவினர்  அநாகரீகமான கருத்துக்களை கூறி வருகின்றனர். இதற்காக திமுக வெட்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.தமிழகத்தில் 10 ஆண்டுகளாக சாமானியர்களின் ஆட்சி நடக்கிறது. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே ஆட்சியமைக்க நினைக்கின்றனர் திமுகவினர். திமுக , காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டை ரத்து செய்வார்கள். மக்களுக்காக உழைக்கும் கட்சி அதிமுக. குடும்பத்திற்காக உழைக்கும் கட்சி தி.மு.க எனவே மக்கள் சிந்திக்க வேண்டும் என தெரிவித்தார்.


Advertisement