இந்தியா Covid-19

ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளுக்கு திடீர் மூச்சுத்திணறல்.. இருவரும் அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதி.!

Summary:

Aishwarya Rai Bachchan daughter Aaradhya admitted to Nanavati hospital

நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா பச்சன் இருவரும் கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இருவரும் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவரது குடும்பத்தருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவரது மகன் மற்றும் பிரபல நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும், அபிஷேக் பச்சனின் மனைவியும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது மகள் ஆராத்யா பச்சனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் இருவரும் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா இருவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவந்தனர்.

தற்போது அவர்கள் இருவருக்கும் மூச்சு திணறல் ஏறப்டத்தை அடுத்து, இருவரும் நானாவதி மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Advertisement