இந்தியா சினிமா

கொரோனா பாதித்த நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகளின் தற்போதைய நிலை என்ன? சற்றுமுன் வெளியான தகவல்.!

Summary:

Aishwarya and her daughter corona test negative

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகிய இருவரும் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக ஐஸ்வர்யா ராயின் கணவரும், நடிகருமான அபிஷேக் பச்சான் தனது டடிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா உறுதியநிலையில் அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை அடுத்து அவரது  அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆரத்யா பச்சன் ஆகியோருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

அபிஷேக் பச்சனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில், ஐஸ்வர்யா மற்றும் அவரது மகள் இருவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தனர். பின்னர் இருவருக்கும் மூச்சுத்திணறல் அதிகமானதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்தனர்.

இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் கொரோனா இல்லை என பரிசோதனை முடிவுகள் வந்திருப்பதாகவும், இருவரும் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு சென்றுள்ளதாகவும் நடிகர் அபிஷேக் பச்சன்  தெரிவித்துள்ளார். மேலும், நானும் எனது தந்தையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.


Advertisement