13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
பல்லாயிரம் கோடி நஷ்டத்தை சந்திக்கும் ஏர் இந்தியா.! வெளியான ஷாக் தகவல்.!
ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்க முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், நடப்பு நிதியாண்டில் அதன் நஷ்டம் 10,000 கோடி அளவுக்கு இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா பாதிப்பால், அனைத்து விமான நிறுவனங்களும் கடுமையான பாதிப்பை சந்தித்திருக்கும் நிலையில், ஏர் இந்தியா நிறுவனமும், நடப்பு நிதியாண்டில் அதிக அளவில் இழப்பைச் சந்திக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் நஷ்டம் ரூ.9,500 கோடி முதல் ரூ.10 ஆயிரம் கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
2007-ல் ஏர் இந்தியா நிறுவனத்துடன் உள்நாட்டு விமான சேவை நிறுவனமான இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இணைக்கப்பட்டது. அதன் பின்னர் ஏற்பட்ட ஆண்டு வாரியான நஷ்டத்தில் இது தான் மிக அதிகமான தொகையாக உள்ளது என கூறப்படுகிறது.
ஏர் இந்தியாவின் இந்த நஷ்டம், அரசின் பங்கு விலக்கல் திட்டத்தை பாதிக்கக்கூடும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக ஏர் இந்தியாவின் மொத்த மதிப்பிற்கு பாதிப்புகள் ஏற்பட்டு, அதன் பங்கு விற்பனை விலை குறைய வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.