
Summary:
Again gas cylinder rate reduced
பெட்ரோல், டீசல், கேஸ் என அனைத்தும் மக்களை அச்சுறுத்தும் வகையில் பயங்கர உச்சத்தை தொட்டது. ஆனால், சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. இந்நிலையில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் கேஸ் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டு உபயோகத்திற்கான மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 1.46 குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, மானியமில்லாத சிலிண்டரின் விலை ரூ. 30 வரை குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் கடந்த டிசம்பர் மாதம் வீட்டு உபயோகத்திற்கான மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 5.91 இம், மானியமில்லாத சிலிண்டரின் விலை ரூ. 120.50 இம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement