#BREAKING# திடீரென சரிந்த மண்! 10 பேர் உயிரிழப்பு! சோகத்தில் மூழ்கிய கிராமம்!



Accident in Telungana

 

தெலுங்கானா மாநிலம் நாராயணப்பேட்டை மாவட்டத்தில் மண் சரிந்து 10 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் நாராயணப்பேட்டை மாவட்டத்தில், மரிக்கல் மண்டலம் திலேர் கிராமத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் அப்பகுதி மக்கள் பணி செய்துகொண்டிருந்துள்ளனர். அப்போது பொக்லைன் இயந்திரம் மூலம் மண் எடுத்து கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

அந்த விபத்தில் 100 நாள் பணியில் இருந்தவர்கள் மீது மண் சரிந்து 10 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அங்கு நடந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.