இந்தியா Covid-19

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர் அபிஷேக் பச்சனின் நிலை என்ன..? வெளியான தகவல்.!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த பிரபல பாலிவுட் நடிகரை அபிஷேக் பச்சன் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சான், அபிஷேக் பச்சனின் மனைவி ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

ஐஸ்வய்ரா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா இருவரும் ஏற்கனவே கொரோனாவில் இருந்து குணமடைந்தநிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினர். ஆனால் அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் இருவரும் தொடர்ந்து சிகிச்சையில் இருந்தனர்.

இந்நிலையில் தான் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டதாக நடிகர் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில், இன்று மதியம், எனக்கு கொரோனா இல்லை என பரிசோதனையில் முடிவாகியுள்ளது. எனக்காகவும் என் குடும்பத்தினருக்காகவும் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. நானாவதி மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு நன்றிக்கடன்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.


Advertisement