பட்டப் பகலில் நடு ரோட்டில் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட தொழிலாளி.... வேடிக்கை பார்த்த மக்கள் அதிர்ச்சி சம்பவம்...!
பட்டப் பகலில் நடு ரோட்டில் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட தொழிலாளி.... வேடிக்கை பார்த்த மக்கள் அதிர்ச்சி சம்பவம்...!

தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத் புறநகர் பகுதியில் தொழிலாளியை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டப்பகளில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உள்ள இடத்தில், ஒரு கும்பல், தொழிலாளி ஒருவரை சுற்றிவளைத்து வெட்டிக் கொலை செய்துள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் புறநகரில் அமைந்துள்ள அப்சல்கஞ்ச் பகுதியில் வசிப்பவர் ஜெகன் சாய்நாத். இவர் கண்ணாடி அறுக்கும் வேலை செய்து வருகிறார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை வேலை முடிந்து ஜெகஞ தனது பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அப்சல்கஞ்ச் பகுதியில் வழிமறித்த மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை இருசக்கரவாகனத்தில் இருந்து கீழே தள்ளியது.
தப்பித்து சென்ற அவரை விரட்டி சென்ற அந்த கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. பட்டப்பகலில் பலர் கண் முன் இந்த சம்பவம் நடந்தது. இதை அங்கிருந்தவர்கள் வேடிக்கை பார்த்தனர். ஒரு சிலர் படுகொலை காட்சிகளை தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்து காவல்துறையினருக்கு அனுப்பி வைத்தனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
இதனிடையே கொலையாளிகள் மூன்று பேரும் அங்குள்ள மூசி நதியில் குதித்து நீந்தி தப்பி சென்றனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் படுகொலை செய்யப்பட்ட ஜெகன் சாய்நாத் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினர் விசாரணையில் ரவுடி கும்பல்களுக்கிடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று கருதுகின்றனர். செல்போன் வீடியோ காட்சிகளை அடிப்படையாகக் வைத்து 6 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தீவிரமாக குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.
பட்டப்பகளில் நடந்த இந்த படுகொலை சம்பவம் பொது மக்களிடையே பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.