இந்தியா

தாயின் அருகில் தூங்கிக்கொண்டிருந்த 8 மாத குழந்தை! கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த பகீர் சம்பவம்.

Summary:

A woman and a man steal an 8-month-old baby

உத்திரபிரதேச மாநிலத்தில் தாயின் அருகில் தூங்கி கொண்டிருந்த 8 மாத ஆண் குழந்தை ஒன்றை ஒரு ஆணும், பெண்ணும் திருடி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தின் மொராதாபாத் நகரில் கல்ஷாஹீத் என்ற இடத்தில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றில் தாயின் அருகே 8 மாத குழந்தை உறங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த இருவரில், ஆண் காவலுக்கு நிற்க அந்த பெண் அந்த குழந்தையை திருடுகிறார்.

தனது சொந்த குழந்தையை தூங்குவதுபோல் சற்றும் தயக்கம் இன்றி அந்த பெண் குழந்தையை திருடும் காட்சி அனைவரையும் பதறவைத்துள்ளது. அந்த பெண் குழந்தையை திருடும்போது அந்த பகுதியில் சில ஆள் நடமாட்டம் இருந்தும் அவர்களுக்கு சந்தேகம் வராத வகையில் அந்த பெண் அந்த குழந்தையை திருடியுள்ளார். 


Advertisement