மண்ணுக்குள் இருந்து வந்த குழந்தையின் அழுகை சத்தம்..! வெளியே துடித்த 2 கால்கள்..! மண் குவியலை தோண்டியவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!

மண்ணுக்குள் இருந்து வந்த குழந்தையின் அழுகை சத்தம்..! வெளியே துடித்த 2 கால்கள்..! மண் குவியலை தோண்டியவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!


a-newborn-was-dug-up-from-a-mound-of-sand-at-a-village

பிறந்து சில நாட்களே ஆன குழந்தை ஒன்று மண்ணுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் உள்ள சோனா என்ற கிராமத்தில் கட்டிட பணி நடைபெற்றுள்ளது. பணிக்கு நடுவே கட்டிடத்தின் ஒரு பகுதியில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. பணியாளர்கள் தங்கள் பணியை நிறுத்திவிட்டு அழுகை சத்தம் வந்த இடம் நோக்கி சென்றுள்ளனர்.

அப்போது அங்கு குவிக்கப்பட்டிருந்த மணல் குவியல் ஒன்றில் இருந்து குழந்தை ஒன்றின் கால் அசைவது தெரிந்துள்ளது. பதறி அடித்து ஓடிய பணியாளர்கள் மணல் குவியலில் புதைக்கப்பட்டு இருந்த ஆண் குழந்தையை உயிருடன் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

Crime

அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் குழந்தை மண்ணை விழுங்கியிருந்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. சற்று நேரத்தில் அதுவும் சரிசெய்யப்பட்டு தற்போது குழந்தை நலமுடன் உள்ளது.

குழந்தை புதைக்கப்பட்ட சில நிமிடங்களிலையே குழந்தை அழுக தொடங்கியதால் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது, அதேநேரம் குழந்தையை புதைத்தவர் அங்கிருந்து அதிக தூரம் சென்றிருக்கவும் வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மாநில தலைநகர் லக்னோவிலிருந்து 260 கி.மீ தொலைவில் உள்ள ஒரு அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.