பக்கத்து வீட்டில் இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காமக் கொடூரன் கைது...!a-lecherous-man-who-raped-a-girl-at-home-was-arrested

12 வயது சிறுமியை பக்கத்து வீட்டில் உள்ளவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் பிலிப்ஹட் மாவட்டம் புரன்பூர் பகுதியில்உள்ள 12 வயது சிறுமி தனது வீட்டில் நேற்று தனியாக இருந்துள்ளார். அந்த சிறுமியின் பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். இதை அறிந்த பக்கத்து வீட்டுக்காரரான சுக்லால் சிறுமியின் வீட்டிற்குள் சென்றுள்ளார். 

அங்கு, வீட்டில் இருந்த சிறுமியை சுக்லால் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பிறகு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சிறுமியின் பெற்றோர் வீட்டிற்கு வந்ததும் தனக்கு நடந்த கொடூர சம்பவம் குறித்து சிறுமி அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அவர்கள் ஆத்திரமடைந்தனர்.

உடனே இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பி ஓடி தலைமறைவான, சுக்லாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.