மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
ரணக் கொடூரம்... மயக்க மருந்து கொடுக்காமல் 24 பெண்களுக்கு ஆப்ரேஷன் செய்த மருத்துவர்... வலியால் துடித்துடித்த பெண்கள்..!

பீகார் மாநிலத்தில் 24 பெண்களுக்கு மயக்க மருந்து கொடுக்காமல் கதற கதற ஆப்ரேஷன் செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள சகாரியாவில் இரண்டு அரசு பொது சுகாதார மையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு 24 கிராம பெண்களுக்கு கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை மயக்க மருந்து எதுவும் செலுத்தாமல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுவாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது அதற்கு முன்பாக மயக்க மருந்து செலுத்தப்பட்ட பின்பு தான் அறுவை சிகிச்சையை மேற்கொள்வார்கள். ஆனால் சகாரியாவில் உள்ள அரசு மருத்துவமனையில் மயக்க மருந்து கொடுக்காமல் பெண்களுக்கு கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பெண் ஒருவர் கூறுகையில் நான் வலியால் கதறி துடித்தேன் ஆனால் எனக்கு மயக்கம் மருந்து செலுத்தாமல் என் கை, கால்களை நான்கு பேர் பிடித்துக் கொண்டனர். பின்பு ஆப்ரேஷன் முடிந்த பின்னரே எனது வலியை குறைப்பதற்காக மருந்து ஒன்றை எனது உடம்பில் செலுத்தினர் என்று கூறியுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் அரசு சுகாதார மைய மருத்துவர். மேலும் அந்த மருத்துவர் கூறுகையில் மயக்க மருந்து அனைத்து பெண்களுக்கும் கொடுக்கப்பட்டது ஆனால் அது சில பெண்களுக்கு மட்டும் வேலை செய்யவில்லை என்றும் கூறியிருக்கிறார். இருப்பினும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.