தாறுமாறாக ஓடிய பேருந்து.. கார் மீது மோதி விபத்து.. குஜராத்தில் பயங்கரம்..!

தாறுமாறாக ஓடிய பேருந்து.. கார் மீது மோதி விபத்து.. குஜராத்தில் பயங்கரம்..!


A bus that ran in the wrong direction.. An accident that hit a car.. Terrible in Gujarat..!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது தனியார் பேருந்து மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் - மும்பை நெடுஞ்சாலையில் உள்ள பகுதியில் இன்று அதிகாலை கார் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

இந்தக் கோர விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், மேலும் 15 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிவுள்ளது.

gujarat

மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கையில் பேருந்து ஓட்டுனருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்படவே கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி கார் மீது மோதி விபத்துக்குள்ளானதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50,000 வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.