2200 கி.மீ தொலைவில் உள்ள கோவிலுக்கு சைக்கிளில் கிளம்பிய 68 வயது பாட்டி! வைரலாகும் வீடியோ காட்சி

2200 கி.மீ தொலைவில் உள்ள கோவிலுக்கு சைக்கிளில் கிளம்பிய 68 வயது பாட்டி! வைரலாகும் வீடியோ காட்சி


A 68 year old Marathi lady travel 2200 km by cycle

68 வயதான மூதாட்டி ஒருவர் சைக்கிளில் 2200 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்துவரும் சம்பவம் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் ரேகா தேவ்பன்கர். தற்போது 68 வயதாகும் இவர் அதீத பக்தியின் காரணமாக மகாராஷ்டிராவில் உள்ள தனது வீட்டில் இருந்து காஷ்மீரில் இருக்கும் வைஸ்னோ தேவி தேவி கோவிலுக்கு செல்ல முடிவு செய்துள்ளார். அவர் இருக்கும் வீட்டிற்கும், கோவிலுக்கும் உள்ள தூரம் சுமார் 2200 கிலோ மீட்டர்.

Mysterious

இந்த 2200 கிலோ மீட்டர் தூரத்தையும் தனி ஆளாக சைக்கிளில் கடக்க முடிவு செய்துள்ளார் ரேகா தேவ்பன்கர். அதற்காக சிறந்த சைக்கிள் ஒன்றை தேர்வு செய்து, தனக்கு தேவையான பொருட்களுடன் கடந்த ஜூலை 24 ஆம் தேதி தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.

தினமும் 40 கிலோ மீட்டர் பயணம் செய்கிறார். இரவு ஆனால் ஒரு இடத்தில் ஓய்வு எடுத்துவிட்டு பின்னர் காலையில் மீண்டும் தனது பயணத்தை தொடங்குகிறார். அவ்வாறு அவர் சைக்கிளில் செல்லும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

சிலர் இவரின் இந்த முயற்சியை பாராட்டினாலும், இந்த வயதில் இது மிகவும் ஆபத்தான செயல் என்று சிலர் எதிர்க்கவும் செய்கின்றனர்.