தொடரும் மர்ம மரணங்கள்.. 9ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் மரணம்.!9th std school girl heart attack in gujrat

சமீப காலமாக விளையாட்டு வீரர்கள், நடன கலைஞர்கள், இளம் வயதினர் என வயது வித்தியாசமில்லாமல் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக விளையாட்டு வீரர்கள் மைதானத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

gujarat

அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள அம்ரேலியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி சாக்ஷ் ரஜோசரா நேற்று காலை தேர்வுக்கு சென்ற நிலையில் திடீரென கீழே மயங்கி விழுந்து விட்டார். இதனையடுத்து உடனடியாக பள்ளியில் இருந்தவர்கள் மாணவியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

gujarat

அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் ஏற்படுவது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.