இந்தியா

குழந்தை என்னேரமும் பிறக்கலாம்.! நர்ஸ் பணியாற்றும் நிறைமாத கர்ப்பிணி பெண்..! வியக்க வைக்கும் அவரின் சேவை..!

Summary:

9 months pregnant nurse service for patients

நிறைமாத கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் செவிலியர் ஒருவர் மக்களுக்கு சேவையாற்றிவரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இந்த உலகம் பல்வேறு இழப்புகளை சந்தித்துவருகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள் போன்றோர் கொரோனாவுக்கு எதிரான போரில் நேரடியாக களமிறங்கி போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தில் சிலர் இறக்கும் சூழலும் உள்ளது.

இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ரூபா என்ற 9 மாத கர்ப்பிணி செவிலியர், குழந்தை பிறக்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையிலும் தற்போது உள்ள சூழலில் தனது சேவையை உணர்ந்து தினமும் மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளுக்கு மருத்துவ பணியாற்றிவருகிறார்.

ரூபாவின் இந்த செயலை பலரும் பாராட்டினாலும், அதே நேரம் மிகவும் கவனம் தேவை எனவும் கூறிவருகின்றனர். மேலும், நேற்று உலகம் முழுவதும் செவிலியர்கள் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், ரூபா போன்ற சேவை மனப்பான்மை கொண்ட அனைத்து செவிலியர்களுக்கும் வாழ்த்துக்கள் குவிந்துவருகிறது.


Advertisement