இந்தியா

ஹோட்டல் அறையில் மர்மமாக உயிரிழந்து கிடந்த 8பேர்! வெளியான நெஞ்சை உறையவைக்கும் அதிர்ச்சி காரணம்!

Summary:

8persion dead in hotel room by gas heater

கேரளாவை சேர்ந்தவர்கள் பிரவீன்கிருஷ்ணன், ஜெயகிருஷ்ணன்,  ராம்குமார் மற்றும் ரஞ்சித் குமார். அவர்கள் 4 பேரும் ஒரே கல்லூரியில் ஒன்றாக படித்த நெருங்கிய நண்பர்கள். அவர்கள் நால்வரும் தங்களது குடும்பத்தினருடன் ஒன்றாக நேபாளத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.  மேலும் அங்கு சுற்றிப் பார்த்தபின்பு அவர்கள் அனைவரும் செவ்வாயன்று  அங்கிருந்து விமானத்தில் திரும்ப ஏற்பாடு செய்திருந்தனர்.

இதற்கிடையில் அவர்கள் அனைவரும் திங்கட்கிழமை நேபாளத்தில் மேக்வான்புர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்தனர். அங்கு ஹோட்டல் அறையின் கதவு,  ஜன்னல்கள் அனைத்தும் மூடிய நிலையில் அவர்கள் குளிர்காய்வதற்காக கேஸ் ஹீட்டரை பயன்படுத்தியுள்ளனர். 

அப்பொழுது போதிய காற்று வசதி இல்லாத நிலையில் வாயுநெறி ஏற்பட்டு பிரவீன் கிருஷ்ணன் அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகள்,  ரஞ்சித் குமார் அவரது மனைவி மற்றும் மகன் உள்ளிட்ட 8 பேரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியாவிற்கு கொண்டு வர நேபாளம் இந்திய தூதரக அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து இன்று அவர்களது உடல் இந்தியாவிற்கு கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 


Advertisement