திடீரென ஏற்பட்ட ஏற்பட்ட வெடி விபத்து! பரிதாபமாக உயிரிழந்த 8 பேர்! சோக சம்பவம்!

திடீரென ஏற்பட்ட ஏற்பட்ட வெடி விபத்து! பரிதாபமாக உயிரிழந்த 8 பேர்! சோக சம்பவம்!


8 people died in fire accident

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள போய்சாரில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் கொல்வாடே என்ற கிராமத்தில் பார்மா நிறுவனம் அமைந்துள்ளது. அங்கு நேற்று மாலை 7.20 மணியளவில் சில இரசாயனங்கள் பரிசோதனையின்போது குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. அந்த விபத்தினால் ஏற்பட்ட தீயில் சிக்கி 8 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

fire

பயங்கர தீ விபத்து நடந்த இடத்தில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் இழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

அங்கு ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்குவதாக மகாராஷ்டிரா மாநிலமுதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.