பறிபோகும் 70,000 இந்தியர்களின் வேலைவாய்ப்பு; அமெரிக்காவின் புதிய திட்டத்தால் திண்டாடும் ஐடி நிறுவனங்கள்!

பறிபோகும் 70,000 இந்தியர்களின் வேலைவாய்ப்பு; அமெரிக்காவின் புதிய திட்டத்தால் திண்டாடும் ஐடி நிறுவனங்கள்!



70000-indians-employment-in-doubt-at-america

அமெரிக்காவில் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் H-1B விசாக்களின் கீழ் வேலைவாய்ப்பு மற்றும் சிறப்பு குடியேற்ற விதிகளை "மறுபரிசீலனை செய்ய" திட்டமிட்டுள்ளது. இதனால் அமெரிக்கவில் உள்ள இந்திய ஐ.டி. நிறுவனங்கள், மேலும் இந்திய வம்சாவளி அமெரிக்கர்களால் நடத்தப்படும் சிறிய மற்றும் நடுத்தர ஒப்பந்த நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்படும் என்று தெரிகிறது.

H-1B விசா மூலம் அமெரிக்காவில் பணிபுரியும் பெரும்பாலானவர்கள் இந்திய ஐடி நிறுவனங்களை சேர்ந்தவர்களே. இந்த  H-1B விசா அமெரிக்க நிறுவனங்களுக்கு தேவையான ஒரு துறையில் திறமையான வெளிநாட்டு ஊழியர்களை தற்காலிக குடியுரிமையில் அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்கு பயன்படுகிறது. இந்த விசா மூலம் அதிகமான இந்தியர்கள் அமெரிக்காவில் குடியேறி வேலை செய்து வருகின்றனர்.

H1-B visa

இந்த விசா மூலம் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியா மற்றும் சீனாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை தங்கள் நாட்டில் தங்கி வேலை செய்ய அனுமதி அளித்து வந்தது. இந்நிலையில் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறையால் நேற்று வெளியிடப்பட்ட தகவலில் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகளில் உள்ள விதிகளை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மாற்றப்போவதாக வெளியிட்டுள்ளது.

மேலும் இதில் முக்கிய அம்சமாக H-1B விசா மூலம் அமெரிக்காவில் பணிபுரியும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் H4 விசாவை நீக்குவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இதனால் H4 விசா மூலம் அமெரிக்காவில் பணி புரியும் அனைத்து ஊழியர்களுக்கும் வேலை வாய்ப்பு பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.

H1-B visa

இந்த H4 விசா மூலம் அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய ஊழியர்களின் எண்ணிக்கை 70 ஆயிரம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தால் 70000 இந்திய ஊழியர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகும் என்று அமெரிக்கா வாழ் இந்தியர்கள் அச்சமடைந்துள்ளனர். 

இதனால் மேலும் அமெரிக்காவில் இருக்கும் இந்திய ஐடி நிறுவனங்கள் மற்றும் இந்திய வம்சாவளி அமெரிக்கர்களால் நடத்தப்படும் சிறிய மற்றும் நடுத்தர ஒப்பந்த நிறுவனங்கள் பாதிக்கப்படும் என தெரிகின்றது. மேலும் H-1B விசாவில் அமெரிக்காவுக்குச் செல்லும் ஊழியர்களின் தகுதிகளை மேம்படுத்தவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது.