இந்தியா

சரக்கு வாகனம் மோதி 6 வயது சிறுமி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழப்பு.. கண்ணீர் சோகம்.!

Summary:

சரக்கு வாகனம் மோதி 6 வயது சிறுமி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழப்பு.. கண்ணீர் சோகம்.!

அதிவேகமாக வந்த சரக்கு வாகனம் மோதியதில், 6 வயது சிறுமி உடல் நசுங்கி உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலிராஜ்பூர் மாவட்டத்தில் Barjhar crossing பகுதியில் அதிவேகமாக சரக்கு வாகனம் ஒன்று சென்று உள்ளது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் சென்று கொண்டிருந்த சிறுமியின் மீது வேகமாக மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஆவேசமடைந்து சரக்கு வாகனத்தை சிறை பிடித்துள்ளனர். மேலும், 6 வயது சிறுமிக்கு விபத்து ஏற்படுத்தியதற்காக காரை அடித்து நொறுக்கி தீ வைத்ததுடன் தப்பி ஓட முயன்ற ஓட்டுநரையும் தீயில் தள்ளிவிட்டுள்ளனர்.

இதில் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஓட்டுநர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தெரியவர, மருத்துவமனைக்கு சென்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement