இந்தியா

தீவிரமாகும் கொரோனா! இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வு! வெளியான தகவல்!

Summary:

562 persion affected by corono in India

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ்  தற்போது உலகெங்கும் 180 நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்தியாவிலும் இந்த கொடிய வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நாடெங்கிலும் ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டது.பேருந்துகள், ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. மேலும் மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனோவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 562ஆக உயர்ந்துள்ளது. அதாவது மகாராஷ்டிராவில் 107 பேர்,  டெல்லியில் 31 பேர், குஜராத்தில்  33 பேர், ராஜஸ்தானில் 33 பேர்,  கர்நாடகத்தில் 41பேர், பஞ்சாபில் 29 பேர்,  பீகாரில் இருவர் மற்றும் தமிழ்நாட்டில் 18 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் கேரளாவில் 109 பேர்,  தெலுங்கானாவில் 36 பேர்,  உத்தரப்பிரதேசத்தில் 37 பேர்,   அரியானாவில் 26, லடாக் 13பேர் மேற்குவங்கம் 9 பேர், ஆந்திராவில்  8 பேர், புதுச்சேரியில் ஒருவர் கொரோனோவால்  பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement