தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
மச்சினிச்சியை துடிதுடிக்க குத்திகொன்ற அக்கா கணவர்.! மனைவி, மாமியார் படுகாயம்.! அதிர்ச்சி சம்பவம்!!
மும்பை ஜோகேஸ்வரி பகுதியில் வசித்து வருபவர் 50 வயது நிறைந்த முகமது ஹிம்மத் சேக். இவரது மனைவி நிலோபர். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதனால் நிலோபர் கணவரை பிரிந்து பத்லாப்பூரில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்று அங்கேயே இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அண்மையில் விடியற்காலையிலேயே முகமது ஹிம்மத் சேக் பத்லாப்பூரில் உள்ள நிலோபரின் அம்மா வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளார். அப்பொழுது நிலோபர் கதவை திறந்துள்ளார். உடனே முகமது ஹிம்மத் சேக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த நிலையில் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்து அவரை தடுக்க நினைத்த நிலோபரின் சகோதரி சனோபர், தாய் பரிதாவையும் அவர் கத்தியால் முரட்டுதனமாக தாக்கியுள்ளார்.
இதில் சனோபர் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்துடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததுடன், முகமது ஹிம்மத் சேக்கை பிடித்து அவர்களிடம் ஒப்படைத்தனர். பின் படுகாயமடைந்த நிலோபர், பரிதா இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த சனோபரின் உடல் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது ஹிம்மத் ஷேக்கிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.