கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
3 மாத தவிப்பின் வலி..! அம்மாவை பார்ப்பதற்காக..! டெல்லியில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் தனியாக பயணித்த 5 வயது சிறுவன்..!

டெல்லியில் இருந்து 5 வயது சிறுவன் ஒருவன் தனி ஆளாக விமானத்தில் பயணம் செய்து பெங்களூரு வந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரை சேர்ந்த அந்த 5 வயது சிறுவன் கொரோனா ஊரடங்கிற்கு முன்பாக டெல்லியில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளான். சிறுவன் மட்டும் தாத்தா வீட்டில் இருந்த நிலையில் பெற்றோர் பெங்களூரு திரும்பிவிட்டனர். இந்நிலையில்தான் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பெற்றோரால் டெல்லி சென்று தங்கள் மகனை அழைத்துவர இயலவில்லை, டெல்லியில் இருந்து சிறுவனின் தாத்தாவாலும் சிறுவனை பெங்களூருக்கு அனுப்ப முடியவில்லை. இப்படி தாய் ஒரு இடத்திலும், குழந்தை ஒரு இடத்திலும் கடந்த இரண்டரை மாதங்களாக அவதிப்படுவந்துள்னனர்.
இந்நிலையில்தான் மத்திய அரசு உள்நாட்டு விமான சேவைக்கு ஒப்புதல் வழங்கியதை அடுத்து நேற்றில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி சிறுவனின் உறவினர்கள் சிறுவனை தனி ஆளாக டெல்லி விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு விமானத்தில் ஏற்றி வழி அனுப்பிவைத்துள்ளனர்.
சிறுவனும் தனி ஆளாக பெங்களூரு விமான நிலையத்தை வந்தடைந்தான். சிறுவன் அங்கு வருவதற்கு முன்னதாகவே சிறுவனின் தாய் தனது அன்பு மகனை அழைத்துச்செல்ல அங்கு காத்திருந்தார். மகன் வந்ததும் அவனை அழைத்துக்கொண்டு தாய் அங்கிருந்து கிளம்பினார்.