அம்மா மீது அத்தை மண்ணெண்ணெய் ஊற்றினாங்க, பாட்டி தீ வச்சாங்க! 5வயது சிறுமி மழலை மொழியில் கூறிய பதறவைத்த வாக்குமூலம்! - TamilSpark
TamilSpark Logo
இந்தியா

அம்மா மீது அத்தை மண்ணெண்ணெய் ஊற்றினாங்க, பாட்டி தீ வச்சாங்க! 5வயது சிறுமி மழலை மொழியில் கூறிய பதறவைத்த வாக்குமூலம்!


உத்தரபிரதேஷம் மாநிலத்தை சேர்ந்தவர் நபீஸ் என்பவர் சாயிஷா திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு  5வயதில் பாத்திமா என்ற மகள் இருந்துள்ளார். இந்தநிலையில் நபீஸ் மும்பையில் வேலை செய்து வந்துள்ளார்.

நபீஸின் குடும்பத்தாருக்கு சாயிஷாவை பிடிக்கததால் நபீஸ் சில தினங்களுக்கு முன் முத்தலாக் தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்பு தெரிவித்த சாயிஷா, காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீசார்  நபீஸ் சொந்த ஊர் திரும்பியதும் காவல் நிலையத்திற்கு வரும்படி கூறியுள்ளனர். 

இந்தநிலையில் இரு தினங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்த நபீஸ்க்கும், சாயிஷாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த நபீஸ் சாயிஷாவை அடித்துள்ளார், அவரது சகோதரி மண்ணெண்ணெய் ஊற்ற, நபீஸ்ன் தாயார் தீக்குச்சி வைத்து பற்ற வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். 

அங்குநடந்த சம்பவத்தை நேரில்பார்த்து கொண்டிருந்த சாயிஷாவின் 5வயது மகள் பாத்திமா நடந்தவற்றை மழலை மொழியில் கூறியது காவல்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படத்தி உள்ளது. இதனையடுத்து தலைமறைவான குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo