புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை 5 பேருக்கு கொரோனா பாதிப்பு.! உச்சகட்ட பதற்றத்தில் கேரளா.!
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. 70 கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 3000 கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர்.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 34 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா கூறுகையில், வெளிநாடு சென்றுவந்த அவர்கள் சென்றுவந்த நாடு குறித்து கூறவில்லை, பரிசோதனைக்கு ஒத்துழைக்கவில்லை, மருத்துவமனையிலும் சேர மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஒரு குழந்தை உட்பட 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளநிலையில் அனைவரும் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவதாக அமைச்சர் கூறியுள்ளார். வைரஸ் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இத்தாலி சென்றுவந்ததாக கூறப்படுகிறது. இதன்மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 39 ஆக உயர்ந்துள்ளது.