இந்தியா

அக்கா மகளிடம் அந்த படத்தை காண்பித்து மாமன் செய்த கொடூரம்! இறுதியில் தாய் எடுத்த முடிவு?

Summary:

4 years old girl abused by relation in maharashtra

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஒருபக்கம் அதிகரிக்கும் அதேவேளையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் அதிகரித்துக்கொண்ட வருகிறது. இந்நிலையில் அக்கா முறையுடைய பெண்ணின் 4 வயது குழந்தையை 25 வயது இளைஞர் ஒருவர் பாலியல் கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகில் உள்ள வாடி என்ற நகரை சேர்ந்த அந்த பெண் பல்வேறு வீடுகளில் வீட்டு வேலை பார்த்துவந்துள்ளார். அவருக்கு நான்கு வயதுடைய பெண் குழந்தை ஓன்று உள்ளது. குறிப்பிட்ட அந்த பெண் தனது உறவினர் ஒருவரின் வீட்டிலும் வேலை பார்த்துவந்துள்ளார்.

பள்ளி விடுமுறை நாட்களில் வேலை செய்யும் உறவினர் வீட்டிற்கு அந்த பெண் தனது குழந்தையை அழைத்துச்செல்வது வழக்கம். இந்நிலையில் சமபவத்தன்று அந்த குழந்தைக்கு மாமா முறையுடைய 25 வயதுடைய இளைஞன் குழந்தைக்கு தொலைபேசியில் ஆபாச படம் காட்டியுள்ளார்.

மேலும், படத்தில் வருமாறு நாம் செய்யலாம் என கூறி அந்த குழந்தையை பாலியல் கொடுமை செய்துள்ளார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட அந்த சிறுமி நடந்த விஷத்தை தாயிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த தாய் இதுகுறித்து காவல் நிலையாயத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் அந்த இளைஞரை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனனர்.


Advertisement