நெஞ்சை கனமாக்கும் 4 மாத குழந்தையின் இறுதிச்சடங்கு..! கொரோனா தொற்றால் பறிபோன பிஞ்சு குழந்தையின் உயிர்.!

நெஞ்சை கனமாக்கும் 4 மாத குழந்தையின் இறுதிச்சடங்கு..! கொரோனா தொற்றால் பறிபோன பிஞ்சு குழந்தையின் உயிர்.!


4 months old baby died in kerala due to corono

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. கொரோனவை தடுக்க அணைத்து நாடுகளும் தீவிர முயற்ச்சியில் இறங்கியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா பரவலை தடுக்க வரும் மே 3 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த 4 மாத பெண் குழந்தை ஓன்று உயிர் இழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் மாமல்லபுரம் பகுதியை சேர்ந்த 4 மாத பெண் குழந்தை மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

corono

பரிசோதனைக்கு பிறகு குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்த மருத்துவர்கள் வெண்டிலேட்டர் மூலம் குழந்தைக்கு செயற்கை சுவாசம் வழங்கிவந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த பிஞ்சு குழந்தை உயிர் இழந்துள்ளது.

இந்நிலையியல், உயிரிழந்த அந்த 4 மாத பிஞ்சு குழந்தையை இறுதிச்சடங்கிற்கு கொண்டு சென்ற புகைப்படம் தற்போது வெளியாகி பார்ப்போரை கண்கலங்க செய்கிறது.