இந்தியா

இந்தியாவில் 31 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு.. பலி எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

Summary:

31 lakhs people affected by corona

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸின் கோரத்தாண்டவம் இன்று இந்தியாவிலும் பரவி நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நோய்க்கு இதுவரை மருந்துகள் வெளியாகாத நிலையில் மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 61,408 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 31, 06, 348 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் நேற்று ஒரே நாளில் மட்டும் 836 பேர் உயிரிழந்ததை அடுத்து இறப்பு எண்ணிக்கையானது 57,542 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது. 


Advertisement