இந்தியா

அழுதுகொண்டே 3 வயசு குழந்தையை சாலையில் தூக்கி கொண்டு ஓடிய தாய்..! ஆம்புலன்ஸ் அனுப்ப மறுத்த மருத்துவமனை.!

Summary:

3 years old baby died after hospital refused to send ambulance

உடல்நிலை சரியில்லாத குழந்தையை மருத்துவமனை கொண்டுசெல்ல, குழந்தையின் பெற்றோர் ஆம்புலன்ஸ் கேட்டும், மருத்துவமனை ஆம்புலன்ஸ் தராததால் குழந்தை பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் முழு ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலையே முடங்கி உள்ளனர். போக்குவரத்துக்கு வசதியும் நிறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற சமயத்தில் சில அவசர உதவிகள் கிடைக்காமல் மக்கள் திண்டாடிவருகின்றனர். இந்நிலையில், பீகார் மாநிலத்தில் உள்ள ஜெகனாபாத்தை சேர்ந்த தம்பதியின் 3 வயது குழந்தைக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது.

உடல்நிலை மிக மோசமான நிலையில் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல குழந்தையின் பெற்றோர் ஆம்புலன்ஸ் உதவி கேட்டதாகவும், ஆனால் அரசு மருத்துவமனை அவர்களுக்கு ஆம்புலன்ஸ் உதவி வழங்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால், குழந்தையை எப்படியும் காப்பாற்றவேண்டும் என நினைத்து உடல்நிலை சரியில்லாத 3 வயது குழந்தையை தூக்கிக்கொண்டு குழந்தையின் தாய் சாலையில் ஓடும் காட்சி இணையத்தில் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கின்றது. இந்த விவகாரம் தொடர்பாக பதிலளித்துள்ள மாவட்ட நீதிபதி, உண்மை என்னவென்று இன்னும் தெரியவில்லை.

இதுகுறித்து தகுந்த விசாரணை நடத்தப்படும். ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டது தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


Advertisement