வீட்டிலிருந்த 3 வயது குழந்தையை கவ்விச்சென்று கொலை செய்த விலங்குகள்.. வனப்பகுதியை ஒட்டி வீடு இருப்போர் கவனம்..!3 year old baby dead by wild animal

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பதோஹி உஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட பூரே மட்கா கிராமத்தில் வசித்து வருபவர் சரோஜ் தேவி. இவர் தனது குழந்தையுடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் எழுந்து பார்க்கும் போது சரோஜ்தேவி தனது 3 வயது குழந்தையான ஆசாத்தை காணாமல் தேடியுள்ளார். 

அப்போது வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவில் ஆசாத்தின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவிட்டனர். பின் விசாரித்ததில் வனவிலங்கு தாக்கி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. 

இரவில் உறங்கும் போது அவரது மகனை வனவிலங்குகள் தூக்கிச் சென்று கடித்து கொன்று இருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் போடப்பட்டு செல்லப்பட்டதால் சடலம் விரைவாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடலை தூக்கி சென்றால் தேடுதல் பணி சிரமமாக இருந்திருக்கும். குழந்தை மாயமானதாக அறிவிக்கப்பட்டிருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.