கோடீஸ்வரனாக இருந்தவருக்கு ஒருவாய் சோறு கூட கிடைக்காத அவலம்.! துரத்திய மகன்கள்..! சோறுபோட்டவர்களையும் மிரட்டிய சம்பவம்.!

3 sons grabbing properties from father and send him out


3 sons grabbing properties from father and send him out

3 கோடி ரூபாய் சொத்துக்களை பிடுங்கிக்கொண்டு பெத்த தந்தையை மூன்று மகன்கள் துரதியடித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவின் சித்திப்பேட் மாவட்டதை சேர்ந்தவர் 79 வயதான பொத்து மல்லையா. இவருக்கு பொத்து சுதாகர், பொத்து ஜனார்த்தன் மற்றும் பொத்து ரவீந்தர் என மூன்று மகன்கள் உள்ளனர். பொத்து மல்லையா சுமார் 3 கோடி வரை சொத்து வைத்திருந்தநிலையில் அவரது மூன்று மகன்களும் தந்தையின் சொத்துக்களை தங்கள் வசப்படுத்திக்கொண்டு அவரை  வீட்டைவிட்டு துரத்தியிருக்கிறார்கள்.

இதனால் ஆதரவு இல்லாமல் தனித்து விடப்பட்ட அவருக்கு கிராம மக்கள் சிலர் உணவுகொடுத்து வந்துள்ளனர். அவர்களையும் மிரட்டி, தங்கள் தந்தைக்கு யாரும் சாப்பாடு கொடுக்க கூடாது என அச்சுறுத்தி இருக்கிறார்கள்.

இந்நிலையில் அந்த கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், ஏமாற்றுதல், மூத்த குடிமக்கள் நலச்சட்டப் பிரிவுகளின் கீழ் பொத்து மல்லையாவின் மூன்று மகன்களின் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

மேலும் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் மீட்கப்பட்ட பொத்து மல்லையா முதியோர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டநிலையில் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். சொந்த தந்தையின் சொத்துக்களை பிடுங்கிக்கொண்டு அவரை மகன்களே துரத்தி அடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.