கோவிலுக்குள் மூன்று பேரின் தலை துண்டிப்பு! அதிர்ச்சி சம்பவம்!
கோவிலுக்குள் மூன்று பேரின் தலை துண்டிப்பு! அதிர்ச்சி சம்பவம்!

ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தை அடுத்துள்ள கிராமம் கொத்திகோட்டா என்ற கிராமத்தில் மிகவும் பழமையான சிவன் கோயில் ஒன்று உள்ளது. அதே பகுதியை சேர்ந்த சிவராம் மற்றும் அவரின் சகோதரி கமலம்மா ஆகியோர் கோவிலுக்கு பூஜை செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில் அந்த கோவிலின் அருகே இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆணின் தலைகள் துண்டிக்கப்பட்டு கிடந்தது. கொலை செய்யப்பட்டவர்கள் அதே சிவன் கோயிலில் பூஜை செய்யும் பணிகளில் ஈடுபட்டு வந்த சிவராம் மற்றும் அவரது சகோதரி கமலம்மா என்பது தெரிய வந்தது.
இவர்களுடன் பெங்களூருவைச் சேர்ந்த லட்சுமியம்மாள் என்பவரும் வசித்து வந்துள்ள நிலையில் அவரும் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த ஆய்வில், கோயிலுக்கு அருகே பூஜை நடத்தப்பட்டிருப்பதையும், சிவலிங்கத்தின் மீது ரத்தக் கறை இருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அத்துடன் கோயில் வளாகத்திலும் ரத்தம் தெளிக்கப்பட்டிருப்பதாக தெரிந்தது. இந்தநிலையில் புதையல் இருப்பதாக கருதி யாரேனும் மூன்று பேரையும் நரபலி கொடுத்தார்களா என்ற சந்தேகத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.