அட பாவி மனுஷா.. உன்னோட போதைக்காக அப்பாவி 3 உயிர்கள் போய்விட்டதே.!! மது போதையில் வாகனம் ஓட்டி கொடூர விபத்து.!!

அட பாவி மனுஷா.. உன்னோட போதைக்காக அப்பாவி 3 உயிர்கள் போய்விட்டதே.!! மது போதையில் வாகனம் ஓட்டி கொடூர விபத்து.!!


3 person died in accident

 தற்போது மது குடிப்பது சமூக அந்தஸ்து என்ற நிலை போல் மாறிவிட்டது. பல இளைஞர்கள் மதுவினால் தங்களது வளர்ச்சி பாதையை இழந்து, எதிர்காலத்தை சீரழித்து கொண்டுள்ளனர். தற்போது மதுவினால் அதிகப்படியாக விபத்து ஏற்படும் நிகழ்வும் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. இந்தநிலையில், கர்நாடகா மாநிலத்தில் மது அருந்திவிட்டு டிரக் ஓட்டிய ஓட்டுனர், பைக் மீது மோதியதில் இரட்டை குழந்தைகள் மற்றும் அவர்களது தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் தன்னுடைய மனைவி மற்றும் இரட்டை குழந்தைகளுடன் சிவானந்தன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் தாறுமாறாக வந்த ட்ரக் ஒன்று அவர்கள் மீது மோதியது. ட்ரக் மோதியதில் 4 பேரும் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்டனர். 

இந்த கோர விபத்தில் 2 குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சிவானந்தன் மனைவி ஜோதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும், சிவானந்தன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விபத்தை ஏற்படுத்திய டிரக் ஓட்டுனரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர் மது அருந்திவிட்டு குடிபோதையில் வாகனம் ஓட்டி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.