இந்தியா

தேசிய நெடுஞ்சாலையில் பூட்டிய காருக்குள் பிணமாக மூன்று பேர்! உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிறுவன்!

Summary:

3 members body found in locked cat at national highway

உத்திரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் யமுனா தேசிய நெடுஞ்சாலையில் பூட்டிய நிலையில் கார் ஓன்று நின்றுள்ளது. அந்த பக்கம் ரோந்து பணிக்காக சென்ற போலீசார் காரின் கதவை திறந்து பார்த்தபோது மூன்று பேர் சடலமாகவும், சிறுவன் ஒருவன் உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனை அடுத்து உயிருக்கு போராடிய சிறுவனை மீட்டு போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், காரில் சோதனை செய்தபோது கார் ஓட்டுனரின் கையில் இருந்த துப்பாக்கி மற்றும் கடிதத்தை கைப்பற்றினர். பாதிக்கப்பட்ட நபர்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் நீரஜ் அவரது மனைவி நேஹா மற்றும் மகள் தன்யா ஆகியோர் என்பது தெரியவந்தது.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சென்றபோது ஏதோ ஒரு காரணத்திற்காக நீரஜ் தனது குடும்பத்தினரை கொலைசெய்துவிட்டு தானும் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த வழக்கு குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்திவருகின்றனர்.


Advertisement