கொரானா சமயத்தில் மீண்டும் மீண்டும் பயங்கரவாதிகளின் அட்டூழியம்! 3 இந்திய வீரர்கள் வீரமரணம்!3 army man killed by terrorist

காஷ்மீரில் துணை ராணுவம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.

ஜம்மு காஷ்மீரில் ஏற்கனவே பயங்கரவாதிகளுடனான தாக்குதலில் கர்னல், மேஜர் உள்ளிட்ட 4 ராணுவ வீரர்கள் மற்றும் காஷ்மீர் காவல்துறை துணை கமிஷனர் உட்பட மொத்தம் 5 பேர் வீர மரணமடைந்தனர். பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்தநிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள ஹந்த்வாரா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் மூன்று வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கூடுதல் வீரர்கள் வரவழைக்கப்பட்டு பயங்கரவாதிகளை தேடும் பணியில் இந்திய படையினர் ஈடுபட்டனர். கொரோனா சமயத்தில் பயங்கரவாதிகளின் அட்டூழியம் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது.