இந்தியா

பேரக் குழந்தைகள் எடுத்த தாத்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண்.! வாயடைத்து போன 90ஸ் கிட்ஸ்.!

Summary:

பேரக் குழந்தைகள் எடுத்த தாத்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண்.! வாயடைத்து போன 90ஸ் கிட்ஸ்.!

கர்நாடக மாநிலத்தில் 25 வயது நிறைந்த இளம்பெண் ஒருவர் 65 வயதுமிக்கவரை திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டம், குனிகல் தாலுகா சந்தேமவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மேகனா. 25 வயது நிறைந்த அவருக்கு இளைஞர் ஒருவருடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் செய்த ஒரு வருடத்திலேயே அந்த இளைஞன் வீட்டை விட்டு மாயமாகியுள்ளார். 

இதுகுறித்து மேகனா போலீசில் புகார் அளித்தும் எந்த பலனும் இல்லை. இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்த மேகனாவிற்கு 65 வயது நிறைந்த சங்கரண்ணா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

அதனை தொடர்ந்து இருவரும் இரு வீட்டரின் அனுமதியுடன் நேற்று சக்கதனகுப்பே கிராமத்தில் உள்ள கோவிலில் எளிமையாக திருமணம் செய்துகொண்டனர். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்ட நிலையில்,  வைரலாகி வருகிறது. அதனை பார்த்த சிலர் மேகனாவுக்கு ஆதரவாகவும், சிலர் பேரக் குழந்தைகள் எடுத்த வயதானவரை திருமணம் செய்து கொண்டுள்ளீர்களே எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Advertisement