இந்தியா

பீகாரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 23 பேருக்கு கொரோனா உறுதி!

Summary:

23 people in one family affected by corono in

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 200 நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவிய நிலையில் தற்போது கொரோனா பாதிக்கபட்டவர்களின்   எண்ணிக்கை 7000ஐ தாண்டியுள்ளது. மேலும் 199 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து கொரோனோவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பீகாரில் 60 பேர் கொரோனோவால்  பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 23 பேருக்கு கொரோனா  பாதிப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. பாட்னாவில் இருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சிவான் மாவட்டம். இங்கு பன்ஜ்வார் என்ற கிராமத்திற்கு கடந்த மாதம் 16ல் ஓமன் நகரிலிருந்து நபர் ஒருவர் வருகை தந்துள்ளார். அவருக்கு ஏப்ரல் 4ஆம் தேதி கொரோனா நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. 

இதற்கிடையில் அந்த நபர் சிவான் மாவட்டத்திலுள்ள தனது உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று வந்துள்ளார். இந்த நிலையில் அந்த நபரின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 23பேருக்கு கொரோனா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த மற்ற 2 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிவான் மாவட்டத்தில் மட்டும் 31பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 23பேரில் 4 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்ததாகவும்  தகவல்கள் வெளிவந்துள்ளது. 


Advertisement