குடி போதையில் ஆண் ஆணிற்கே தாலி கட்டிய சம்பவம் ... பின்னர் நிகழ்ந்த கூத்தை பாருங்கள்...



22 years young man married 21 years young man in telungana

தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் ஜோகிபேட் பகுதியை சேர்ந்தவர் 22 வயது ஆட்டோ டிரைவர். இவர் அருகில் இருக்கும் மதுபான கடையில் தினமும் குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அங்கு 21 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இருவரும் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி மது அருந்தி விட்டு ஓரின சேர்க்கை பற்றி பேசியுள்ளனர். பின்னர் இருவரும் ஜோகிநாத் கோவிலுக்கு சென்று 22 வயது ஆட்டோ டிரைவர் 21 இளைஞரின் கழுத்தில் தாலி கட்டியுள்ளார். பின்னர் இருவரும் அவரவர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

police

அதன்பின் சில நாட்கள் கழித்து ஆட்டோ டிரைவரின் வீட்டிற்கு சென்று 21 வயது இளைஞர் ஆட்டோ டிரைவரின் பெற்றோரிடம் அவருக்கும், அவர்களது மகனுக்கும் நடந்த திருமணம் குறித்து கூறி இனி தான் தனது கணவருடன் தான் வாழ்வேன் என சொல்லியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆட்டோ டிரைவரின் பெற்றோர் அந்த இளைஞரை அடித்து அனுப்பியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து அந்த இளைஞர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் இரு குடும்பத்தாரும் தனியாக பேசி ரூ10 ஆயிரம் பணத்தை கொடுத்து ஒருவருக்கொருவர் சம்மந்தம் இல்லை என எழுதி வாங்கிக்கொண்டனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.