தமிழகம் இந்தியா

ஊரடங்கை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை! மக்களே உஷார்!

Summary:

2 years punishment for breach of- ockdown

கொரோன வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனாவால் இதுவரை உலக அளவில் 50000 பேருக்கு அதிகப்படியானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை தீவிர தடுப்புநடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் நாடுமுழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதிவரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்படி, பொதுமக்கள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியில் வர தடை விதிக்கப்பட்டு ஊரடங்கு கடுமை ஆக்கபட்டுள்ளது. இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறும் நபர்கள் மீது, ஐ.பி.சி. மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் 2  ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.


Advertisement