பகீர் வீடியோ காட்சி.. சாலையில் ஓடிய பந்து.. பந்தை எடுக்க ஓடிய சிறுவன்.. துரிதமாக செயல்பட்ட பேருந்து ஓட்டுநர்..

பகீர் வீடியோ காட்சி.. சாலையில் ஓடிய பந்து.. பந்தை எடுக்க ஓடிய சிறுவன்.. துரிதமாக செயல்பட்ட பேருந்து ஓட்டுநர்..


2-years-old-boy-escaped-from-road-accident-in-kerala-vi

நெடுஞ்சாலையில் ஓடிய பந்தை எடுக்க முயன்ற 2 வயது சிறுவன் பெரிய விபத்தில் இருந்து மீண்ட வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.

கேரளா மாநிலம் நெய்யாற்றின்கரையில் அமைந்துள்ள சைக்கிள் கடை ஒன்றுக்கு தம்பதியினர் ஒருவர் தங்கள் இரண்டு மகன்களுடன் சைக்கிள் வாங்குவதற்காக சென்றுள்ளனர். அப்போது பெற்றோர் இருவரும் சைக்கிளை பார்த்துக்கொண்டிருந்தபோது அவர்களின் இரண்டு மகன்களும் சைக்கிள் கடை உள்ளே பந்தை வைத்து விளையாடிக்கொண்டிருந்துள்ளனர்.

அப்போது அவர்கள் விளையாடிய பந்து கடைக்கு உள்ளே இருந்து உருண்டோடி எதிரே இருந்த நாகர்கோவில் - திருவனந்தபுரம் நெடுஞ்சாலையை கடந்து மறுபுறம் பந்து சென்றுள்ளது. பந்து தனது கையில் இருந்து வெளியே சென்ற உடன், 2 வயது சிறுவன் அந்த பந்தை ஏட்பதற்காக பந்து பின்னாலையே ஓடியுள்ளான்.

சிறிது நேரத்தில் அந்த சிறுவன் சாலையிலையே தடுக்கி கீழே விழுந்தநிலையில் அப்போது அவ்வழியாக வந்த கேரள அரசுப் பேருந்து ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தினார். இதனால் இரண்டு வயது சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளான். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்தநிலையில் தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.