கொரோனா தடுப்பு நடவடிக்கைளை மீறினால் இனி 2 வருஷம் ஜெயில்.! ஒரு லட்சம் அபராதம்.! அதிரடி சட்டம் இயற்றிய மாநிலம்.!2 years jail if not wear mask in Jarkand

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறைதண்டனை, 1 லட்சம் அபராதம் என ஜார்க்கண்ட் அரசு அதிரடி சட்டம் இயற்றியுள்ளது.

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் முகக்கவசம் அணியவேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும் என அரசு வலியுறுத்திவருகிறது.

corona

இருப்பினும் பல இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே செல்வது, சமூக இடைவெளியை பின்பற்றாமல் நடப்பது என வாடிக்கையாக உள்ளனர். இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீறுபவர்களுக்கு ரூ. 1 லட்சம் அபராதமும், 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இதற்காக புது சட்டம் இயற்றப்பட்டு அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் வெளியே செல்வது, பொது இடங்களில் எச்சில் துப்புவது, சமூக இடைவெளியை முறையாக பின்பற்றாமல் இருப்பவர்கள் மீது இந்த இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.