இந்தியா உலகம்

வீடியோ: ஒரே நேரத்தில் தனி தனி வாயில் 2 எலிகளை சாப்பிடும் இரட்டைத்தலை பாம்பு!! வைரல் வீடியோ இதோ..

Summary:

இரட்டைத்தலை பாம்பு ஒன்று தனது இரண்டு வாய்களால் இரண்டு எலிகளை சாப்பிட முயலும் வீடியோ ஒன்று

இரட்டைத்தலை பாம்பு ஒன்று தனது இரண்டு வாய்களால் இரண்டு எலிகளை சாப்பிட முயலும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

பாம்பு என்றாலே படையே நடுங்கும் என்பார்கள். அதற்கு காரணம் பாம்பின் கொடிய விஷத்தன்மையும், அது கடித்தால் உயிரே போய்விடும் என்கிற பயமும்தான் காரணம். பாம்புகளை கண்டு எல்லோரும் பயந்தாலும், பாம்புகளையும் செல்ல பிராணிகளாக வளர்த்துவருபவர்களும் உண்டு.

அந்த வகையில், snakebytestv என்ற இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் தான் வளர்ந்துவரும் இரட்டைத்தலை கொண்ட பாம்பு ஒன்று எலிகளை சாப்பிட முயலும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், இரட்டைத்தலை கொண்ட பாம்பு ஒன்று, தனது இரண்டு வாய்களாலும் ஒரே நேரத்தில் இரண்டு எலிகளை சாப்பிட முயற்சிக்கிறது. இதோ அந்த காட்சி.


Advertisement